Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

காஷ்மீரில், ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஏ.டி.எம்

ஜம்மு-காஷ்மீரில், சமீப காலங்களில் ஏடிஎம் மற்றும் வங்கிகளில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோத சக்திகள், தங்கள் நிதித் தேவைக்காக இது போன்ற கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் ஜம்மு- காஷ்மீரில் புல்வாமா, குல்காம் உள்ளிட்ட பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள வங்கிகளில், பணப் பரிமாற்றச் சேவை சில நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இன்று அதிகாலை ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கும் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதில், சுமார் 5 லட்சம் இருந்ததாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புல்வாமா காவல்துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்திவருகின்றனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement