புதிய சீரியல்களில் 500 ரூபாய்...ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது ! | Reserve Bank releases new 500 rupees note

வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (13/06/2017)

கடைசி தொடர்பு:20:11 (13/06/2017)

புதிய சீரியல்களில் 500 ரூபாய்...ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது !

ரிசர்வ் வங்கி இன்று புதிய சீரியல் நம்பரில், 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது.

rupees

நவம்பர் 8ஆம் தேதி, 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. கறுப்புப் பணம், கள்ளநோட்டு உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தற்போது இந்த நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்துவருகின்றன.

இந்த நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. 'A'  சீரியல்களைக்கொண்டதாக அந்த நோட்டு அமைந்துள்ளது. ஏற்கெனவே புழகத்திலுள்ள 'E' சீரியல்கொண்ட நோட்டுகள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டுகளில், 2017ஆம் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இரண்டு மாறுதல்களைத் தவிர, நவம்பர் 8 ஆம் தேதி அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் போன்றுதான் இந்த நோட்டுகளும் உள்ளன.