Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பி.ஜே.பி ஆளும் மாநிலத்தில் நுழைந்த அகிலேஷ் யாதவ் பைகள்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்று, அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வராகிப் பல மாதங்கள் ஓடி விட்டன. இதற்கு முன் அங்கு சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்தது. அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தார். இதனிடையே, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அகிலேஷ் யாதவின் முகம் பதித்த பைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


ஆனால், இந்தச் சம்பவம் நடந்தது உத்தரப்பிரதேசத்தில் இல்லை. பி.ஜே.பி ஆளும் மற்றொரு மாநிலமான குஜராத்தில். அங்கு 1 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு அரசு சார்பில், இலவச பைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான இலவசப் பைகள் இன்று வழங்கப்பட்டன. அதில்தான், அகிலேஷின் படம் பதிந்த பைகள் வழங்கப்பட்டுள்ளன.


சுமார் 12,000 பைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் வைரலாகப் பரவத் தொடங்கவே அங்கு அதிகாரிகள் மற்றும் பி.ஜே.பி தரப்பில் அதிர்ச்சியாகியுள்ளனர். இதையடுத்து, இந்தச் சம்வம் குறித்து விசாரணைக்கு முடக்கிவிட்டுள்ளது அம்மாநில அரசு. இந்தப் பைகள் கடந்த சமாஜ்வாதி ஆட்சியில் உத்தரப்பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக அச்சிடப்பட்டவை.


இவை எப்படி குஜராத் சென்றது? அகிலேஷ்க்கும், குஜராத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close