Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'புத்தகத்தையும் லேப்டாப்பையும் கையிலெடுங்கள்!' - காஷ்மீர் இளைஞர்களுக்கு ராணுவத் தளபதி அட்வைஸ்

காஷ்மீரில் நிலவும் அமைதியற்ற தன்மையை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் அந்த மாநில இளைஞர்கள் மத்தியில், இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத், 'காஷ்மீர் இளைஞர்கள் புத்தகம் அல்லது லேப்டாப்பை கையிலெடுக்க வேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தை கல்விக்குச் செலவுசெய்ய வேண்டும்' என்று அட்வைஸ் கொடுத்துள்ளார். 

Bipin rawat

 மேலும், 'பல தலைமுறைகள் காஷ்மீரில் நடக்கும் பிரச்னையால் அழிந்துள்ளது. இப்போது நிலவிவரும் தொடர் வன்முறைச் சம்பவங்களால், காஷ்மீர் மக்களின் மனதிலும் இளைஞர்கள் மனதிலும் பெரும் பயம் நிலைகொண்டுள்ளது. ஒரு பக்கம் கிளர்ச்சியாளர்கள், மறுபக்கம் பாதுகாப்புப் படையினர்... எத்தனை நாள் இது தொடர நாம் அனுமதிப்பது. இதற்கு, விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சீக்கிரமே அமைதியான சூழ்நிலை திரும்பும் என்று நம்புகிறேன். காஷ்மீரின் இளைஞர்கள், கையில் புத்தகம் அல்லது லேப்டாப்பை வைத்திருக்க வேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தை கல்விக்காகச் செலவுசெய்ய வேண்டும்.' என்று கூறியுள்ளார். 

சமீபத்தில், ஐஐடி-யில் சேர்ந்து படிப்பதற்கான நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வில் ராணுவத்தால் பயிற்சி கொடுக்கப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள் 24 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement