Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்நாட்டுப் பாதுகாப்புகுறித்து மூன்றாண்டுகளுக்குப் பின்னர் மத்திய அரசு ஆலோசனை!

இந்திய உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், வரும் ஜூலை 3 ஆம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராஜ்நாத் சிங்

உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளுடன் இணைந்து கலந்தாலோசித்து, தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும். ஆனால், மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து எந்தவொரு ஆலோசனைக் கூட்டமும் இதுவரையில் நடைபெறவில்லை. தற்போது தீவிரவாதம், வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாலும் இதனால் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாலும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜூலை 3 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஒவ்வொரு மாநில உள்துறை அமைச்சரும், மத்திய உள்துறை அமைச்சருடனான கூட்டத்தில் பங்கேற்பர் எனக் கூறப்படுகிறது. நாட்டின் அத்தனை உள்துறை அமைச்சர்களும் ஒன்றிணைந்து பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னை, எல்லைப் பாதுகாப்பு, தீவிரவாதத் தாக்குதல்கள் தடுப்பு, மாநில காவல்துறை மேம்பாடு ஆகியவைகுறித்து ஆலோசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement