Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜனாதிபதி வேட்பாளர்! அத்வானிக்கு ஆதரவாக ஒலித்த முதல் குரல்!

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி ஆவதற்கான முழுத் தகுதியும் பெற்றுள்ளவர் அத்வானி மட்டுமே என பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா கருத்துத் தெரிவித்துள்ளார்.

சத்ருகன் சின்ஹா

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவர் என்ற கேள்வி நிலவி வருகிறது. இந்தச் சூழலில் வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தகுதி வாய்ந்த வேட்பாளர் அத்வானிதான் என பாஜக எம்.பி.யும், முன்னணி நடிகருமான சத்ருகன் சின்ஹா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சத்ருகன் சின்ஹா தன் ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக-வின் முக்கியத் தலைவரான அத்வானியே ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவர். ஜனாதிபதி பதவிக்கான தகுதி, அனுபவம், திறமை, மரியாதை, என அத்தனைப் பொருத்தமும் நிறைந்த தலைவர் அத்வானி. இவரே ஜனாதிபதியாக வேண்டுமென விரும்புகிறேன். அதிகமானோரின் மன எண்ணத்தையே என்னுடைய கருத்தாகப் பதிவு செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement