Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள்!'- மத்திய அரசுக்கு மம்தா கோரிக்கை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'இந்திய அரசு, விவசாயக் கடன் மொத்தத்தையும் தள்ளுபடிசெய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மம்தா பேனர்ஜி

நாட்டில் உள்ள விவசாயக் கடன் அனைத்தையும் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளால் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சில நாள்களுக்கு முன்னர், 'விவசாயக் கடன்களை ரத்துசெய்ய வேண்டும் என்று விரும்பும் மாநில அரசுகள், அவர்களின் நிதியிலிருந்தே அதைச் செய்ய வேண்டும்' என்று கறாராகக் கூறிவிட்டார்.

இதையொட்டிதான் மம்தா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய அரசு, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள் கடனையும் ரத்துசெய்ய வேண்டும். விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது, அரசு அமைதியாக இருக்கக்கூடாது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஆளுங்கட்சி, 'விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடிசெய்யப்படும்' என்று உறுதி கொடுத்திருந்தனர். சொன்னபடி அதை நடைமுறைப்படுத்த வேண்டும். மாநிலங்கள் மீது அதைச் செய்யும்படி பணிக்கக்கூடாது.' என்று பதிலடி கொடுத்துள்ளார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement