Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை: பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு!

சித்தூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்து, ஆந்திர அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை வரும் 19ஆம் தேதிக்கு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொசஸ்தலை

representative image

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் ஓடும் கொசஸ்தலை ஆற்றின் நீர், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு  முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. கொசஸ்தலை ஆற்றிலிருந்து லங்கா கால்வாய் வழியாக நீர் தமிழகத்தை வந்தடைகிறது. இந்த நிலையில் ஆந்திர அரசு, லங்கா கால்வாயை மறித்து நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டத் தொடங்கியுள்ளது. 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இந்த அணைகள் முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படும்போது, தமிழகத்தைச் சேர்ந்த 10 கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சுமார் 2,000 ஏக்கர் நிலங்கள் கொசஸ்தலை ஆற்றின்மூலம் பயன்பெற்றுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், ஆந்திர அரசின் தடுப்பணைத் திட்டத்துக்கு, தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள், தடுப்பணை அருகே ஆந்திர அதிகாரிகளிடம் இன்று பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. இதனிடையே, பேச்சுவார்த்தை வரும் 19 ஆம் தேதிக்கு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிளை கால்வாய்களில் நீர்வரத்தை பாதிக்கும் காரணிகள் பற்றி ஆய்வு செய்ய இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement