Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் ஓடவுள்ள ஷிங்காஷென் புல்லட் ரயில் எப்படி இருக்கும்?

லகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் இந்தியாவில் இருந்தாலும், தொழில்நுட்பத்தில் ஜப்பான், சீனா போன்ற நாடுகளைவிட நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். ஜப்பானில் 565 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் சோதனை ஓட்டம், சமீபத்தில் நடைபெற்றது. இந்திய ரயில்கள், இப்போதுதான் மணிக்கு 160 கி.மீ வேகத்தையே எட்டியிருக்கின்றன. அதுவும் ராஜ்தானி ரக ரயில்கள் மட்டும்தான். மற்ற ரயில்கள் 110 முதல் 120 கி.மீ வேகம்தான் அதிகபட்சம். ஜப்பான் நாடுதான் புல்லட் ரயில்களின் தாயகம். 

ஷிங்காஷென் புல்லட் ரயில்

இந்தியாவில் புல்லட் ரயில் அமைப்பதற்கு, ஜப்பான் நாடுதான் முழு ஒத்துழைப்பை அளிக்கவுள்ளது. ஜப்பானின் ஷிங்காஷென் புல்லட் ரயில்தான் இந்தியாவில் முதன்முதலாக ஓடப்போகிறது. மும்பையிலிருந்து அகமதாபாத் வரை புல்லட் ரயிலுக்கான இருப்புப்பாதைகள் அமைக்கும் பணிக்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. அநேகமாக அடுத்த ஆண்டு பணி தொடங்கிவிடும். வரும் 2023-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் முதல் புல்லட் ரயில் பாதை அமைத்துவிட அரசுத் திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், எட்டு ஆயிரம் கோடி ரூபாய் இந்திய ரயில்வேயின் முதலீடு. மொத்த முதலீட்டில் எண்பது ஆயிரம் கோடி ரூபாயை ஜப்பான் (Japan International Cooperation Agency )  தருகிறது.  அடுத்த 50 வருடங்களில் இந்தியா இந்தக் கடனை ஜப்பானுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும். குஜராத், மகாராஷ்டிரா அரசுகளும் முதலீடு செய்ய உள்ளன. 

மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸ் பகுதியிலும் அகமதாபாத்தில் சபர்மதியிலும் ரயில்நிலையங்கள் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே 505 கி.மீ தொலைவு. இடையில், சுமார் 12 ரயில்நிலையங்கள் உருவாக்கப்படலாம். சூரத் மற்றும் வதோரா ஆகிய இரு நகரங்களில் மட்டும் ஷிங்காஷன் நின்று செல்லும் . சரியாக 2 மணி 7 நிமிடம்தான் பயண நேரம். தற்போது மும்பையிலிருந்து அகமதாபாத் செல்ல 6 மணி முதல் 8 மணி நேரம் ஆகிறது. 

இந்தியாவில் ஓடவுள்ள ஷிங்காஷென் புல்லட் ரயில்

புல்லட் ரயில் திட்டம் இந்திய ரயில்வே துறையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம். மும்பையில் `விரார்' என்ற இடத்தில் கடலுக்கு அடியில் ஏழு கி.மீ தொலைவுக்குப் பாதை அமைக்கப்படவிருக்கிறது. `தானே' என்ற இடத்தில் 21 கி.மீ நீளம் தொலைவுள்ள சுரங்கப்பாதையும் அமையவிருக்கிறது. இந்தியாவில் கடலுக்கு அடியில் செல்லும் முதல் ரயில் பாதை இதுதான். ஷிங்காஷென் ரயில்கள் ஓட ஆரம்பித்தால், நாள் ஒன்றுக்கு 35,800 பயணிகள் பயனடைவார்கள். கடந்த 2011-ம் ஆண்டு இந்த ரக ரயில்களை ஜப்பான் ரயில்வே அறிமுகப்படுத்தியது. ஷிங்காஷென் ரயில்கள் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும். இதுபோன்ற 280 புல்லட் ரயில்கள் ஜப்பானிடம் உள்ளன. ஹிட்டாச்சி, கவாஸகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள்தான் இந்த ரக ரயில்களைத் தயாரிக்கின்றன. 

ஷிங்காஷென் புல்லட் ரயில் பெட்டி

ஷிங்காஷென் ரயிலில், 10 கோச்சுகள் இணைக்கப்பட்டிருக்கும்.  731 பேர் பயணிக்கலாம். சாதாரணப் பெட்டியில் 658 பேரும் முதல் வகுப்பில் 55 பேரும், கிரீன் க்ளாஸ் ரகத்தில் 18 பேரும் பயணிக்க முடியும். புல்லட் ரயிலில் தாய்மார்கள் பால் கொடுக்கும் அறைகூட இருக்கும். குழந்தைகளுக்கு என்று தனி டாய்லெட் வசதிகொண்டது. அதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனிக் கழிவறை வசதி அமைக்கப்பட்டிருக்கும்.

முதல்கட்டமாக, ஐந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு 25 புல்லட் ரயில்களை இந்தியா வாங்கும். மும்பை-சென்னை, டெல்லி-மும்பை, டெல்லி-கொல்கத்தா, டெல்லி-நாக்பூர் மும்பை-நாக்பூர் வழிகளில் புல்லட் ரயில்கள் விடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் நாக்பூர் நகரம் அமைந்திருப்பதால், புல்லட் ரயில் விடும் திட்டத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement