Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு!

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி, இந்திய ரூபாய் மதிப்பு என அத்தனையும் சரிவிலேயே நிறைவடைந்தது.

ரூபாய் மதிப்பு

உலகளவில் நிலவும் மோசமான வர்த்தக நிலையினாலும், சர்வதேச நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டாலர் பலவீனம் அடைவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய பங்குச்சந்தையின் வர்த்தக தொடக்கத்திலேயே சரிவிலேயே தொடங்கியது நிலவரம். இன்று மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 80.18 புள்ளிகள் சரிந்து 31,075 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 40.10 புள்ளிகள் சரிந்து 9,578 புள்ளிகளாகி நின்றது.

இதேபோல், சரிந்து காணப்பட்ட இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.64.44 காசுகளாக உள்ளது. இந்தச் சரிவு சர்வதேச வர்த்தகத் தொய்வினால் ஏற்பட்டுள்ளது என வர்த்தகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement