வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (16/06/2017)

கடைசி தொடர்பு:08:54 (16/06/2017)

கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். 


1991-1993 காலகட்டத்தில் ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தின் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அந்த நேரத்தில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த ஊழல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அவர், பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தற்போது அந்த வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. இன்று காலையில் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் நேரில் ஆஜரானார்.