Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விமான நிலையத்தில் தகராறு செய்த எம்.பி விமானத்தில் பயணம் செய்யத் தடை!

விமான நிலையத்தில் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்பி., திவாகர் ரெட்டி விமானத்தில் பயணம் செய்வதற்கு நான்கு விமான நிறுவனங்கள் தடைவிதித்துள்ளன. 


தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி திவாகர் ரெட்டி நேற்று காலையில் இண்டிகோ பயணம் செய்வதற்காக விசாகப்பட்டினம் விமானநிலையத்துக்குச் சென்றுள்ளார். விமானம் புறப்படுவதற்கு 28 நிமிடங்கள் மட்டுமே முன்னதாகச் சென்றுள்ளார். ஆனால் விமான நிலைய விதியின்படி விமானம் புறப்படுவதற்கு 45 நிமிடம் முன்னதாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும். எனவே, திவாகர் ரெட்டியை விமான நிலைய அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.

ஆத்திரமடைந்த திவாகர் ரெட்டி, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளார். அவர் கடுமையாகத் தகராறு செய்ததைத்தொடர்ந்து அவருக்குப் பயணம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், திவாகர் ரெட்டியின் இத்தகையை செயலுக்குக் கண்டனங்கள் எழுந்தன. தற்போது, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் திவாகர் ரெட்டி தங்களது விமானத்தில் பயணிப்பதற்குத் தடை விதித்துள்ளன. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement