Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அபுசலீம் உள்ளிட்டோர் குற்றவாளி எனத் தீர்ப்பு!

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளான அபுசலீம் உள்ளிட்ட ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது மும்பை நீதிமன்றம்.

அபுசலீம்

கோப்புப்படம்

கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. தொடர்ச்சியாக நடந்த 12 குண்டு வெடிப்புகளில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது மும்பை தடா நீதிமன்றம்.

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம்மின் கூட்டாளிகளான ஏழு பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அபுசலீம், முஸ்தஃபா தோஸா, கரீம்முல்லா ஷாயீக், முகமது தாஹிர், அப்துல் காயீம், பெரோஷ் கான், ரியாஸ் சித்திக் ஆகிய ஏழு பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement