காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் வெறியாட்டம்... 6 போலீஸார் உயிரிழப்பு | Policemen dead over terrorist attack in Kashmir

வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (16/06/2017)

கடைசி தொடர்பு:06:18 (17/06/2017)

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் வெறியாட்டம்... 6 போலீஸார் உயிரிழப்பு

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ளனர்.

காஷ்மீர்

காஷ்மீரில் பதற்றமான சூழல் தொடர்ந்து வருகிறது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கொல்லப்பட்டது முதலே, காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களும் துப்பாக்கிச் சூடுகளும் அதிகரித்து வருகிறது. இதனிடையே இன்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் லஷ்கர் அமைப்பின் முக்கியத் தலைவர் ஜுனைத் மட்டோ கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே தற்போது காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் காவல்துறையினர் மீது சராமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் தீவிரவாதிகள். இதில் 6 காவல் துறையினர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. காலை ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக லஷ்கர்-இ-தொய்பா, காவல்துறையினரை கொன்றுள்ளனர். இதனால் அனந்த்நாக்கில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.