வெளியிடப்பட்ட நேரம்: 01:13 (17/06/2017)

கடைசி தொடர்பு:09:00 (17/06/2017)

'இந்தியாவின் டிஜிட்டல் மதிப்பை 1 ட்ரில்லியனாக உயர்த்துங்கள்!' - ஐ.டி நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் அறைகூவல்

இந்தியாவின் ஐ.டி துறை மூலம் ஒவ்வோர் ஆண்டும் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், 'ஐ.டி துறை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார மதிப்பை இன்னும் நான்கே ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும்.' என்று ஐ.டி நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாஸ்காம், கூகுள், விப்ரோ போன்ற நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரவி ஷங்கர், 'இந்தியாவின் ஐ.டி துறை 10 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. இதில் ஏற்றுமதி மதிப்பு மட்டும் 7.5 கோடி ரூபாய். எனவே, டிஜிட்டல் பொருளாதாரம் வேகமெடுத்து வருகின்றது. இப்போது இருக்கும் வேகத்தை வைத்துப் பார்த்தால் இன்னும் 7 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலரைக் கடக்கும். ஆனால், ஏன் அவ்வளவு நாள் காக்க வேண்டும். இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் அதைச் சாத்தியப்படுத்திக் காட்டுங்கள்' என்று பேசியுள்ளார்.