ஜிஎஸ்டி வரிவிதிப்பால் திருப்பதி லட்டு விலை உயர்கிறது? | The price of Tirupati Lattu will rise by GST

வெளியிடப்பட்ட நேரம்: 02:07 (17/06/2017)

கடைசி தொடர்பு:08:57 (17/06/2017)

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் திருப்பதி லட்டு விலை உயர்கிறது?

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் திருப்பதி லட்டு பிரசாதம், தங்கும் அறை கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

திருப்பதி

திருப்பதி தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த வரி விதிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட், பிரசாதங்கள் மற்றும் அறை வாடகை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

திருப்பதி லட்டு

 

இது குறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி விதிப்பை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதற்கு முன்னர் சேவை வரியிலிருந்து திருமலை - திருப்பதி தேவஸ்தானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கும் பொருந்தும். இதனால், திருப்பதியிலுள்ள தங்கும் அறைகள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றின் விலை உயரும். குறிப்பாக, 1 லட்டு தயார் செய்ய 35 ரூபாய் செலவாகும் நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பிரசாதங்கள் தயார் செய்யப்படும் பொருள்கள்மீது கூடுதலாக 6 சதவிகித வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் இதன் விலை உயர வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க