வெளியிடப்பட்ட நேரம்: 05:40 (17/06/2017)

கடைசி தொடர்பு:08:07 (17/06/2017)

ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேற பாக்.கிற்கு இந்தியா வலியுறுத்தல்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாகவும், அந்தப் பகுதிகளை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்னை

ஐ.நா. மனிதஉரிமைக்குழுவில் பேசிய இந்தியப் பிரதிநிதி, பலுசிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் போன்ற மனித உரிமை மீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது. காஷ்மீரில் கடந்த 1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தீவிரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என்றும், உலகின் பல்வேறு நாடுகளிலும் செயல்படும் தீவிரவாதக் குழுக்களின் புகலிடமாக அந்நாடு திகழ்கிறது என்றும் இந்தியா குறைகூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி ஐ.நா. மனிதஉரிமைக்குழுவின் பொறுமையைச் சோதித்துவருவதாகத் தெரிவித்த இந்தியா, பயங்கரவாதச் செயல்களின் ஊற்றுக்கண்ணாக அந்நாடு விளங்கி வருகிறது என்று கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க