Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரா? சுஷ்மா ஸ்வராஜ் பதில்!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி வருகின்ற, ஜூலை 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல், கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் வருகின்ற 28 ஆம் தேதி வரை நடக்கிறது. 

Sushma Swaraj


இதற்காக 10-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கய்ய நாயுடு ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, தம்பிதுரை உள்ளிட்டோரைச் சந்தித்தனர். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளருக்கு ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத், அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வந்தன. இது குறித்து விளக்கமளித்துள்ள சுஷ்மா, "நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக வந்த தகவலில் உண்மையில்லை. வெளியுறவுத்துறை அமைச்சராக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று கூறியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement