ஜார்க்கண்ட் பள்ளியில் மாட்டிறைச்சி சமைத்த பள்ளி முதல்வர் கைது!

ஜார்கண்ட் மாநிலத்தில் அரசுப் பள்ளியில் மாட்டிறைச்சி சமைத்ததற்காக அப்பள்ளியின் முதல்வர் மற்றும் உடனிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாட்டிறைச்சி

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சோட்டா மொஹல்லன் ஆரம்பப் பள்ளியில், அப்பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். பாக்கூர் மாவட்டத்திலுள்ள இப்பள்ளியின் முதல்வர் ரோஸா ஹன்சதா மற்றும் இவருக்கு உதவி புரிந்ததாக, இரண்டு உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சைலேந்திர பிரசாத் பர்ன்வால் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளியில் தடைசெய்யப்பட்ட மாட்டிறைச்சியை மதிய உணவுக்காக சமைத்ததாகவும், இதனால் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் பள்ளி முதல்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், அவர்கள் பெற்றோர்களிடம் புகார் அளித்து, அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!