ஹைதராபாத்தில் வாடகைத் தாய் மோசடி: போலீஸாரின் அதிரடி நடவடிக்கை!

வாடகைத் தாய் என்ற பெயரில், பெண்களை ஏமாற்றி மோசடி செய்து வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனையின் மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வாடகைத்தாய்

சட்ட விரோதமாகவும், வர்த்தக ரீதியிலாகவும் வாடகைத் தாய் முறை, மத்திய அரசால் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய் கிரண் கருத்தரிப்பு மருத்துவமனையில் சட்டவிரோதமாக பெண்களை ஏமாற்றி வாடகைத் தாயாக ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டுள்ளார்கள். மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில், இந்த மருத்துவமனையில் 46 பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.

2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணம் தருவதாகக் கூறி டெல்லி, நாகாலாந்து, டார்ஜிலிங், தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 46 பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணிகளாக உள்ளனர். எவ்வித முறையான ஆவணங்கள், உரிமங்கள் ஏதுமின்றி இந்த தனியார் மருத்துவமனையில் ஒன்பது மாத காலமாக இப்பெண்களை வெளியில் கூட விடாமல் அடைத்துவைத்துள்ளனர். மாவட்ட மருத்துவர்கள் குழு, இப்பிரச்னையை கையில் எடுத்து மாநகரப் போலீஸார் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தியச் சட்டப்படி சட்ட விரோதமாக, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க உதவுபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்பது நடைமுறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!