Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மம்தா பானர்ஜி மீது குற்றம் சாட்டும் கூர்க்கா மக்கள் தலைவர்

'எங்கள் போராட்டத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்' என்று மம்தா பானர்ஜி மீது குற்றம் சுமத்தியுள்ளார் கூர்க்கா ஜனசக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பீமல் குருங்.

மம்தா பீமல்

மேற்கு வங்கம் டார்ஜிலிங்கில் பெரும்பான்மை கூர்க்கா இன மக்கள் நீண்ட காலமாகவே தனி மாநில உரிமை கேட்டு வருகின்றனர். அண்மையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலம் முழுவதும் வங்காள மொழி கற்பது கட்டாயம் என அறிவித்தார். இதையடுத்து கூர்க்கா இன மக்கள் போராட்டத்தில் இறங்கினர். கடந்த 7 நாள்களாக நீடித்துவரும் போராட்டத்தில் போலீஸ் வாகனத்துக்கு தீ வைப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில், போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வரும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பீமல் குருங் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இன்று பேசிய அவர், 'வடகிழக்கு தீவிரவாதக் குழுக்களுடன் நாங்கள் செயல்பட்டு வருவதாக கூறி, எங்களின் போராட்டத்தைத் திசை திருப்ப பார்க்கிறார் மம்தா மானர்ஜி. போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பேரணி நடத்தவுள்ளோம். அதை காவல்துறை தடுக்க முயன்றால், பிரச்னை மேலும் வலுக்கும்' எனக் கூறியுள்ளார். 

மம்தா பானர்ஜி நேற்று, 'கூர்க்கா மக்கள் போராட்டத்துக்கு சில வடகிழக்கு மற்றும் வெளிநாட்டு தீவிரவாத குழுக்கள் ஆதரவளித்து வருகின்றன' எனக் கூறியிருந்தார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement