Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லஞ்சம் வாங்கிய ராணுவ அதிகாரியைக் கைது செய்தது சி.பி.ஐ!

arrest

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ராணுவ கிழக்கு பிராந்தியத்தின் பொறியியல் பிரிவில் பணியாற்றி வருகிறார் ராணுவ அதிகாரி கர்னல் சைபால் குமார். ராணுவத்துக்குத் தேவைப்படும் சக்திவாய்ந்த இயந்திரங்களை வழங்குவதற்கு புனேவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இவர் பேரம்பேசி லஞ்சம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரூ.1.80 லட்சம் பேரம் பேசப்பட்டு, இறுதியாக ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக அந்தத் தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டது. முதல் தவணையாக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்நிறுவன அதிகாரியிடமிருந்து வாங்கியபோது கையும்களவுமாகச் சிக்கினார் ராணுவ அதிகாரி சைபால் குமார். உடனடியாக அவரைக் கைது செய்த சி.பி.ஐ, தனியார் நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளையும் கைது செய்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement