டார்ஜிலிங்கில் கூர்க்கா இன மக்கள் மாபெரும் பேரணி!

கூர்க்கா இன மக்களின் போராட்டத்தில் இறந்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று டார்ஜிலிங்கில் பேரணி நடைபெற்றது.

டார்ஜிலிங்

மேற்கு வங்கம் டார்ஜிலிங்கில், பெரும்பான்மையாக வாழும் கூர்க்கா இன மக்கள், நீண்ட காலமாகவே தனி மாநில உரிமை கோரி வருகின்றனர். இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலம் முழுவதும் வங்காள மொழி கட்டாயம் என அறிவித்ததையடுத்து, கூர்க்கா மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவரும் போராட்டத்தில், பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், கூர்க்கா இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, பலியான மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்தவும் மேற்குவங்க அரசாங்கத்தைக் கண்டித்தும் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இதில், கூர்க்கா இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கைகளில் மெழுகுவத்தி ஏந்தி,  பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். டார்ஜிலிங்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், கடைகள் ஒரு வாரமாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!