Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'விளம்பரம் செய்ய விருப்பமில்லை'... யோகா தினத்துக்கு 'நோ' சொன்ன நிதிஷ்!

'சர்வதேச யோகா தினத்தில் பீகார் கலந்துகொள்ளாது' என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Nitish Kumar


பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமாருக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத்திய அரசின் செல்லாக்காசு அறிவிப்பை ஆதரித்த ஒரே எதிர்க்கட்சித் தலைவர் நிதிஷ்தான். குறிப்பாக, சமீபத்தில் சோனியா அழைத்த விருந்துக்கு 'நோ' சொல்லிவிட்டு, மோடி அழைத்த விருந்தில் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் நிதிஷ்.

இந்த நிலையில், யோகா தினக் கொண்டாட்டத்துக்கு கல்தா கொடுத்துள்ளார் நிதிஷ். இதுகுறித்து அவர், "நான் யோகா தினத்துக்கு எதிரானவன் இல்லை. நானும் யோகா செய்வேன். ஆனால், யோகாமூலம் விளம்பரம் தேடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால், பீகார் மாநிலம் யோகா தினக் கொண்டாட்டத்தில் ஈடுபடாது" என்று கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, 74 அமைச்சர்களைவைத்து 74 நகரங்களில் யோகா தினம் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement