Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜனாதிபதி வேட்பாளரை விமர்சித்த பெண் பத்திரிகையாளர் மீது பா.ஜ.க புகார்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்தை விமர்சித்ததற்காக, பிரபல பெண் பத்திரிகையாளர் ரானா அயூப் மீது பா.ஜ.க-வினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

ரானா அயூப்

2002 ஆம் ஆண்டு முதல் 2010 வரை குஜராத்தில் நடந்த படுகொலைகள், போலி என்கவுன்ட்டர்கள்குறித்து உயிரையும் துச்சமாக மதித்து, உண்மையையும்  நீதியையும் வெளியே கொண்டு வர,  புலனாய்வுப் பணியை மேற்கொண்டவர், பத்திரிகையாளர் 'ரானா அயூப்'. இவர் எழுதிய "Gujarat Files: Anatomy of a Cover Up " என்ற புத்தகம், அரசியலின் பல நிலைகளையும் ஆட்டம் காணச்செய்தது.

அதிகார வர்க்கத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரானா அயூப் சமீபத்திய ட்வீட்டில், ஜனாதிபதி வேட்பாளர் செய்தியைவைத்து, ‘பிரதீபா பாட்டீல் மோசமான தேர்வு எனத் தெரிவித்தவர்கள்தானே’ எனப் பதிந்திருந்தார். இதற்காக, அவர்மீது 'தரக் குறைவான விமர்சனம்’ செய்ததாக வழக்குப் பதிந்துள்ளது பா.ஜ.க. வழக்கைப் பதிவுசெய்த பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தன் ட்விட்டர் பக்கத்தில், ‘ரானா அயூப் வெறுப்பு நிறைந்த, தரக் குறைவான, சாதியத் தாக்குதலுடன் கருத்துப் பதிந்துள்ளார்’ எனக் குறிப்பிட்டு, ரானா அயூப் மீதான புகார் மனுகுறித்தும் விளக்கியிருந்தார்.

இதற்குப் பதிலடி தரும் வகையில் ரானா அயூப், ‘சாதியரீதியில் நான் விமர்சித்தேனா... 'மழைக்கு அணியும் கோட்டுடன் குளிக்கும் வித்தையை அறிந்தவர் மன்மோகன் சிங்' என்ற மோடியின் விமர்சனத்தை, சீக்கிய சமூகத்துக்கு எதிரானதாக எடுத்துக்கொள்ளலாமா’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement