அருணாச்சலபிரதேசத்தில் கடும் நிலச்சரிவு: 200-க்கும் மேற்பட்டோரை மீட்டது ராணுவம்

அருணாச்சலபிரதேசத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவி மக்கள் பலர் சிக்கிக்கொண்டனர். நிலச்சரிவில் சிக்கித்தவித்த 200-க்கும் மேற்பட்ட மக்களை ராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.

நிலச்சரிவு

அருணாச்சலப்பிரதேசத்தில் இட்டாநகர் அருகிலுள்ள மேற்கு காமேங் மாவட்டத்தில் இன்று காலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அம்மாநிலத்தில்  பருவ மழை காரணமாக, மலைப் பகுதியான மேற்கு காமேங் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பாலுக்போங் என்ற பகுதியில் கொட்டித்தீர்த்த மழையினால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்தோர் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில், தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த ராணுவப் படையினர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் 15 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் பலத்த காயமடைந்து இட்டாநகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பலர் சிக்கிக்கொண்டனர். இவ்வாறாக 200-க்கும் மேற்பட்டோரை ராணுவ மீட்புப் படையினர் மீட்டு இட்டாநகரில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர்.

இத்தகவலை இந்திய ராணுவத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!