ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் ராம்நாத் கோவிந்த்!

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் பொது வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் முயற்சித்து வந்தன.

Ramnath Govind


இதனிடையே, பா.ஜ.க ஆட்சி மன்றக் குழு நேற்று கூடியது. கட்சியின் மூத்தத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக, ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டார். ராம்நாத் கோவிந்த் பீகார் மாநில ஆளுநராக பணியாற்றி வந்தார்.

இதையடுத்து,  குடியரசுத் தலைவர் தேர்தலில்  ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரிடம் தொலைபேசி அழைப்பு மூலம் மோடி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!