நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்!

நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

neet result


மருத்துவ பட்ட படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதையடுத்து, முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்னும் சில தினங்களுக்கு எந்த முடிவும் வெளியாக போவதில்லை என்று மத்திய அரசின் அதிகாரபூர்வ தேர்வு முடிவுகள் வெளியிடும் இணையதளத்தில் (http://results.gov.in) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்திருந்த  தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதிலுமிருந்து பதினோரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!