'விவசாயக் கடன்கள் தள்ளுபடி' என்ற பேச்சுக்கே இடமில்லை! - அருண் ஜெட்லி திட்டவட்டம்

நாடு முழுவதிலும் இருக்கும் விவசாயிகள், கடனைத் தள்ளுபடி செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் வேளையில், 'விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய எந்த முகாந்திரமும் இல்லை' என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

அருண் ஜெட்லி

இந்திய அளவில் இந்த ஆண்டு உத்தரப்பிரதேச அரசு, முதன்முறையாக அம்மாநிலத்திலுள்ள விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. நேற்று பஞ்சாப் மாநில அரசு, மாநிலத்தின் விவசாயிகள் கடன்களை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள், கடனை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, மகாராஷ்டிரா அரசும் கடன் ரத்து அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், 'மத்திய அரசு நாட்டில் இருக்கும் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இந்நிலையில்தான், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'விவசாயக் கடன் கண்டிப்பாகத் தள்ளுபடி செய்யப்படாது' என்று தெரிவித்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!