Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் அமலுக்கு வருகிறது ஜி.எஸ்.டி

இம்மாதம் 30 ஆம் தேதி நள்ளிரவு முதல் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும்  ஜி.எஸ்.டி அமலுக்கு வரும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வரும் என்று முன்னரே மத்திய அரசு அறிவித்திருந்தது. அது தொடர்பான கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் புதிய வரி அமலாவது குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

வரும் 30 ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் இதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று நிதியமைச்சர் ஜெட்லி தெரிவித்தார்.

பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் ஆகியோர் இந்த புதிய ஜி.எஸ்.டி வரி குறித்து பேசுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதா நேற்று நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement