வெளியிடப்பட்ட நேரம்: 07:54 (21/06/2017)

கடைசி தொடர்பு:07:54 (21/06/2017)

ராம்நாத் கோவிந்துக்கு எத்தனை சதவிகித வாக்குகள் உள்ளது தெரியுமா? #VikatanInfograph

ராம் நாத் கோவிந்த்ந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை களமிறக்கியுள்ளது பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. இவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே தனது வாக்கு வங்கியில் 48.9 சதவிகித வாக்குகளை சேமித்து வைத்திருந்தது. நேற்று ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் புதிதாக சில கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தன.  

இதில் அ.இ.அ.அதி.மு.க, பி.ஜே.டி, டி.ஆர்.எஸ், ஒய்.எஸ்.ஆர்(காங்கிரஸ்) ஆகிய கட்சிகள் ஆதரவை அறிவித்ததன் பேரில்  ஆளும் ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் என்பது 60.81-ஆக அதிகரித்துள்ளது. மேலும் சமாஜ்வாதி, ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை ஆதரவளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஆதரவளிக்கும் பட்சத்தில் 65 % வாக்குகள் ராம்நாத் கோவித்துக்கு கிடைக்கும்.

ராம்நாத் கோவிந்த்

இவ்வளவு வாக்கு வங்கியுடன் களமிறங்கும் ராம்நாத் கோவிந்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் தமிழகம் போன்ற ஆதரவு சதவிகிதம் அதிகம் உள்ள கட்சிகளை மோடி அரசு கட்டுக்குள் வைத்து காரியம் சாதித்துள்ளது என்றும் , மோடி அரசின் திறமையான உத்திகளும் தான் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இவர் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கே.ஆர்.நாராயணனுக்குப் பின் இந்தியா தனது இரண்டாவது தலித் குடியரசு தலைவரை வரவேற்க தயாராகிவிட்டது என்று தான் கூறவேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்