பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பெண்களின் நிலை என்ன?- திடுக்கிடும் ஆய்வு முடிவு! | Survey about women's Job opportunity and economy status

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (22/06/2017)

கடைசி தொடர்பு:16:53 (22/06/2017)

பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பெண்களின் நிலை என்ன?- திடுக்கிடும் ஆய்வு முடிவு!

பிரதமரின் மூன்றாண்டு கால ஆட்சி முடிந்திருக்கிறது. எவ்வளவு திட்டங்கள், எத்தனையோ சீர்திருத்தங்கள். ஜிஎஸ்டி, வங்கிச் சீரமைப்பு என்று இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் சீர்திருத்தங்கள் என்று சர்வதேச அளவில் புகழாரங்கள் குவிகின்றன. டிஜிட்டல் புரட்சியில் பாராட்டு குவிந்துகொண்டிருக்கின்றன. இவையனைத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டு இன்று பெருமிதத்துடன் யோகா செய்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. நாடு வளர்கிறது என்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன?

பெண்களின் பொருளாதாரம்

ஆண், பெண் பேதம் இந்தியப் பொருளாதாரத்தை வளர விடாமல் செய்துகொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் NSSO நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்களுக்கான அத்தனை உரிமைகளும் கொடுக்கப்பட்டுவிட்டன. பெண்கள் சுதந்திரமாக முடிவெடுக்கிறார்கள், எல்லாம் மாறிவிட்டது என்றே நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் பணியில் ஆண் - பெண் விகிதம் வளர்ச்சியடையவில்லை. சொல்லப்போனால் குறைந்திருக்கிறது. பெண்கள் மகப்பேறு காலத்தில் இறப்பது அதிகரித்திருக்கிறது. பெண்கள் கல்வியறிவு பெறுதல் குறைந்திருக்கிறது. இப்படி மீண்டும் பெண்களுக்கான உரிமைகள், பெண்களின் பங்கு குறைய ஆரம்பித்திருப்பதனால் இந்தியப் பொருளாதாரமும் பின்தங்கியிருக்கிறது. 

2004-ல் பணியில் பெண்கள்-ஆண்கள் விகிதமானது 45 சதவிகிதமாக இருந்து வந்தது. ஆனால் 2015ல் 34 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்திருக்கிறது. என்.எஸ்.எஸ்.ஓ ஆய்வின் படி கிராமப்புறங்களில் 1987-88ல் பணியில் பெண்களின் பங்கு 42.5 சதவிகிதமாக இருந்தது 2011-12ல் 18 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. நகர்ப்புறங்களில் பணியில் 25.4 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு 13.4 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. 

மேலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களே சுயமாகத் தொழில் செய்தல், ஒன்றுக்கு மேற்பட்ட வருமானம் ஈட்டும் வேலைகளைச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக பெண்களின் பங்கு குறைந்ததால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியும் குறைந்திருக்கிறது. 

பெண் ஆண் பங்களிப்பு விகிதம்

பொருளாதாரம் 

மேலும் நாளுக்கு நாள் எல்லா துறைகளிலும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் அதற்கேற்ற கல்வித்தகுதி மற்றும் அறிவைக் கொண்டிருப்பது அவசியமாகிறது. ஆனால் பெண்களுக்குக் கல்வியானது மறுக்கப்படுவதும், அப்படியே படித்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் படிக்க அனுமதி மறுக்கப்படுவதும் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருப்பதால், அவர்களால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டு பணி செய்ய முடிவதில்லை. இதுபோன்ற காரணங்களால் ஆட்கள் தேவைப்படக்கூடிய பல்வேறு பணிகள் தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முன்னணி எட்டு துறைகளில் பெண்களின் பங்கு என்பது ஆண்களைக் காட்டிலும் மிகக் குறைவாகவே இருக்கிறது. பல துறைகளில் ஆண்களில் பாதியளவு கூட பெண்களின் பங்களிப்பு இல்லை. 

பொருளாதாரம்

பொருளாதாரம்

ஆணுக்குப் பெண் சரிசமமானவள் என்று மேடைதோறும் பேசினாலும் அது என்னவோ வெறும் வாய்ச்சொல்லாகவே முடிந்துவிடுகிறது. உண்மையான வளர்ச்சி தரமான கல்வியிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இருக்கிறது. பெண்களுக்கு இலவசமாக கேஸ் இணைப்பு கொடுத்தால் மட்டும் மரியாதை கிடைத்துவிடாது. ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதுதான் நிஜமாகவே இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தும்.

நன்றி : The Wire

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்