Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் முதல் ஹோம் டெலிவரி பெட்ரோல் பம்ப்

பெங்களூருவில் இந்தியாவின் முதல் ஹோம் டெலிவரி டீசல் விற்பனை தொடங்கியுள்ளது. 


'மை பெட்ரோல் பம்ப்' என்ற தனியார் நிறுவனம் டீசல் விற்பனையை ஒரு தொடக்கமாக ஒரு வருடத்துக்கு முயற்சி செய்ய முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்ட ஆஷிஷ் குப்தா கூறுகையில், ''பெட்ரோல் என்பது இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு மட்டுமே அதிகமாகப் பயன்படும். டீசல் கனரக வாகனங்கள் ,தொழில் நிறுவனங்கள் தொடங்கி விவசாயம் வரை தேவைப்படும். வருடத்துக்கு டீசலின் தேவை மட்டும் சுமார் 77 மில்லியன் மெட்ரிக் டன். ஆனால், பெட்ரோலின் தேவை 22 மில்லியன் மெட்ரிக் டன்தான். எனினும், எதிர்காலத்தில் பெட்ரோலுக்கும் ஹோம் டெலிவரி அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது'' என்று தெரிவித்தார்.

தற்போது 100 லிட்டர் வரைக்கும் ரூ.99 டெலிவரி சார்ஜாக வசூலிக்கப்படும் என்றும், 100 லிட்டருக்கு மேல் என்றால் லிட்டருக்கு
ஒரு ரூபாய் வைத்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசலுக்கான முன்பதிவைத் தொலைபேசி மூலமாகவோ செயலி மூலமாகவோ செய்யலாம்.

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "முன்பதிவின் அடிப்படையில் வருங்காலத்தில் பெட்ரோல் வீட்டுக்கே வந்து ‘டெலிவரி’ செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார். இதன்மூலம் பெட்ரோல் நிலையங்களில் நிற்கும் நீண்ட வரிசைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement