வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (22/06/2017)

கடைசி தொடர்பு:18:28 (22/06/2017)

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார்!

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14-ம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பா.ஜ.க வேட்பாளராக, ராம்நாத் கோவிந்த் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தார்.

Meira Kumar

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது குறித்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மீராகுமார், மக்களவை முன்னாள் சபாநாயகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
72 வயதாகும் மீராகுமார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்தக் கூட்டத்தில் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி மற்றும் தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டார். 

பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத்தை ஆதரிக்க வேண்டும் என்று மோடி மற்றும் அமைச்சர்கள் காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.