ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனுத் தாக்கல்..! மோடி பங்கேற்பு... | BJP President canditate Ram Nath Govind will file nomination today

வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (23/06/2017)

கடைசி தொடர்பு:09:13 (23/06/2017)

ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனுத் தாக்கல்..! மோடி பங்கேற்பு...

பா.ஜ.க குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனுத் தாக்கல்செய்கிறார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். 


குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பா.ஜ.க., தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவரது கட்சியைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. காங்கிரஸ், தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று, ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்செய்ய உள்ளார். முன்னதாக, அவருக்கு மத்திய அரசு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கலின்போது, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். மேலும், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க முதலமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர். இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்ள உள்ளார்.
 


அதிகம் படித்தவை