ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை முன்மொழிந்தனர்! | Ram Nath Kovind files his nomination papers in presence of PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (23/06/2017)

கடைசி தொடர்பு:14:36 (23/06/2017)

ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை முன்மொழிந்தனர்!

பா.ஜ.க குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்றத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுவை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தனர். 

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பா.ஜ.க., தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவரது கட்சியைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. காங்கிரஸ், தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை அறிவித்துள்ளது. ராம்நாத் கோவிந்த்தின் வேட்புமனுத் தாக்கலை சிறப்பாகச் செய்வதற்கு பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில், மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.