மது விற்க சட்டத்திருத்தம்... பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

ஹோட்டல்கள் மற்றும் உயர் ரக உணவு விடுதிகளில் மது விற்க அனுமதியளித்து, பஞ்சாப் சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மது

அண்மையில் நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்குள் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நெடுஞ்சாலைப் பகுதிகளில் அதிகளவில் விபத்துகள் மற்றும் குற்றங்கள் நடப்பதற்கு, மதுக்கடைகளே காரணம் எனப் பலர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். மேலும், சமூக ஆர்வலர்களும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தனர். இதையடுத்து, மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

இந்நிலையில், பஞ்சாபில் மது விற்க ஆதரவாக சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் சட்டப்பேரவை கூடியது. இதில், 'நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஹோட்டல் மற்றும் உயர் ரக உணவு விடுதிகளில் மது விற்க அனுமதியளித்து சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது'.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!