வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (24/06/2017)

கடைசி தொடர்பு:18:19 (24/06/2017)

விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு... 40 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்

விவசாயிகள் வங்கிகளில் வாங்கியுள்ள 34,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்யவதாக மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. 


மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் சந்திரகாந்த் படில் ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசினர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னவிஸ், '1.5 லட்ச ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்றிருக்கும் விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இந்த முடிவால் 40 லட்சம் விவசாயிகள் கடன் இல்லா நிலையை அடைவார்கள். வங்கிக் கடன்களை செலுத்திய விவசாயிகளுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும்.

அதனால், அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள். இத்தகைய முடிவால் 89 லட்சம் விவசாயிகள் வரை பயன்பெறுவார்கள்' என்றார். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைவிட அதிக அளவு வங்கிக் கடன்களை மகாராஷ்டிர அரசு தள்ளுபடி செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 34,000 கோடி ரூபாய் வரை வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.