வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (25/06/2017)

கடைசி தொடர்பு:09:16 (26/06/2017)

ஆஸ்திரேலிய ஓப்பன் பேட்மின்டன் : சாம்பியன் ஆனார் இந்திய வீரர்  ஸ்ரீகாந்த்!

ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரில் இந்திய வீரர்  ஸ்ரீகாந்த் சாம்பியம் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இறுதிச்சுற்றில் சீனாவின் சென்லாங்கை எதிர்கொண்டார் ஸ்ரீகாந்த். சென்லாங்கை 22-20, 21-16 என்ற செட்களில் வீழ்த்தினார். 

Srikanth

சீனாவின் சென்லாங்கிடம் இதுவரை 5 முறை தோல்வி கண்ட ஸ்ரீ காந்த் அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னர் இந்தோனேஷிய ஓபன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்த  ஸ்ரீ காந்த், தற்போது ஆஸ்திரேலியா பேட்மின்டன் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க