வங்கி வாடிக்கையாளரின் கேள்விக்குப் பதறவைத்த ரிசர்வ் வங்கி பதில்!

பொதுத்துறை வங்கிகளின் லாக்கரில் உள்ள பொருள்கள் திருட்டுப் போனால் வங்கிகளிடமிருந்து எந்த ஓர் இழப்பீட்டையும் எதிர்பார்க்க முடியாது என்று  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக இதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் வழக்கறிஞர் குஷ் கால்ரா என்பவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி இவ்வாறு பதிலளித்துள்ளது. லாக்கர் சேவை விஷயத்தில் வங்கிகள் எல்லாம் கூட்டாக ஒருமித்த கருத்தை எடுத்துள்ளதாக குஷ் கால்ரா  ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் செய்துள்ளார். அதாவது, வாடிக்கையாளர்களின் பொருள்களைப் பாதுகாப்பாக லாக்கரில் வைக்கும் சேவைகளில் வங்கிகள் மிக குறைந்த அளவிலான பொறுப்பையே எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அனைத்து பொதுத்துறை வங்கிகளும் எந்தவொரு பொறுப்பையும் எடுத்துக்கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்த் தெரியவந்துள்ளது.

வங்கி லாக்கரில் வைப்பதற்கு பணம் செலுத்தியும் வங்கிகள் எந்தப் பொறுப்பையும் ஏற்காதபோது பொருள்களுக்கு காப்பீடு செய்து வீட்டிலேயே வைத்துகொள்ளலாம் என்று வழக்கறிஞர் குஷ் கால்ரா கேள்வி எழுப்பியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!