வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (26/06/2017)

கடைசி தொடர்பு:08:47 (27/06/2017)

ஜூன் 30-ம் தேதி ஜிஎஸ்டி சிறப்புக் கூட்டம்... வெங்கைய நாயுடு முக்கியத் தகவல்!

 ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி, இந்தியா முழுவதும் அமலாக உள்ளது. இதையொட்டி, வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சி ஜிஎஸ்டி சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு ஒருங்கிணைக்கிறது. இந்த சிறப்புக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கலாம் என்று தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். 

வெங்கைய நாயுடு

இதுகுறித்து வெங்கைய நாயுடு, 'ஜிஎஸ்டி வரி முறை மிகவும் முக்கியமான சீர்திருத்தம். அதை அமல்படுத்துவதில் ஆரம்பத்தில் சில சுணக்கங்கள் இருந்தாலும், அது விரைவில் கலையப்படும். எனவே, நாட்டிலிருக்கும் அனைவரும் கட்சி பேதம் பார்க்காமலும் அரசியல் பார்க்காமலும் ஜிஎஸ்டி-க்கு முழு ஆதரவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதுதான், இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெறும் மிகப் பெரிய வரி சீர்திருத்தமாகும்.

ஜிஎஸ்டி வரியால், வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களின் விலை குறையும் என்று கூறப்படுகிறது. மேலும், வரி கட்டுவதில் இருக்கும் இடர்ப்பாடுகளும் ஜிஎஸ்டி-யால் நீங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 0 சதவிகிதம் முதல் 43 சதவிகிதம் வரை 6 வெவ்வேறு வரி விகிதங்களில் ஜிஎஸ்டி மூலம் பொருள்களுக்கு வரி வசூலிக்கப்படும்'  என்றார்.