ஜூன் 29-ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிசாட்-17

தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோள் ஜிசாட்-17, வருகிற 29-ம் தேதி விண்ணில் பாயும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜிசாட் 17

ஒவ்வோர் ஆண்டும் 8 முதல் 10 பிஎஸ்எல்வி ராக்கெட்களையும், தலா 2 ஜிஎஸ்எல்வி மார்க்-3, மார்க்-2 ராக்கெட்டுகளையும் விண்ணில் ஏவ வேண்டும் என இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதை, அதிகாரபூர்வமாகச் செயல்படுத்தத் தொடங்கவில்லை என்றபோதும், சமீப நாள்களாக தொடர்ச்சியாகச் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாகச் செலுத்திவருகிறது இஸ்ரோ. தற்போது, தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.

அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்குக் கொண்டுவரப்படவில்லை. இதனால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 5,425 கிலோ எடைகொண்ட ஜிசாட்-17, ஏரியன் ராக்கெட் மூலம் வரும் 29-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் விண்ணில் பாய்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!