தொடரும் மழை... மிரட்டும் அலைகள்... தவிக்கும் மும்பை!

மும்பையில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

Heavy Rain Mumbai

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல மும்பையிலும் கடந்த சில நாள்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முதல் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்கிறது.

சாலைகள் மழை நீர் வெள்ளம்போல சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொலாபா ஆப்சர்வேடரியில் 56.8 மி.மீ மழை பெய்துள்ளது. முக்கியமாக, இன்று மதியம் 12 மணி முதல் ஒரு மணி மட்டும் விக்ரோலி பகுதியில் 24 மி.மீ, அந்தேரி பகுதியில் 18 மி.மீ குர்லா பகுதியில் 14 மி.மீ மழை பெய்துள்ளது.

மேலும், கடல் அலைகளும் நீண்ட உயரத்துக்கு அடிக்கின்றன. இந்நிலையில், அங்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்றும்,  4.81 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!