வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (28/06/2017)

கடைசி தொடர்பு:13:46 (28/06/2017)

ராணுவத்துக்காகப் பிரபல இந்திப் பாடகர் சோனு நிகாம் பாடிய தேசப்பற்று பாடல்!

பிரபல இந்திப் பாடகர் சோனு நிகாம், இந்தோ-திபெத்திய எல்லைகளில் பணி புரியும் ராணுவ வீரர்களுக்காக, தேசப்பற்று மிக்க பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். 

 

இந்தி திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் சோனு நிகாம், கன்னடம், தமிழ், குஜராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். அவர், தற்போது ராணுவ வீரர்களுக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார். ராணுவத்தினருக்காக சோனு நிகாம் பாடியுள்ள பாடல், அவர்களின் வேலையை விளக்கும் விதமாகவும் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை, மத்திய உள்துறைச் செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஸி வெளியிட்டார். சில காலத்துக்கு முன் எழுதப்பட்ட இந்தப் பாடலில், தற்போது சில மாற்றங்கள் செய்து பாடப்பட்டுள்ளது.

'சோனு நிகாம் இந்தப் பாடலைப் பாட, அவராகவே விருப்பம் தெரிவித்தார். இதற்கு அவர், பணம் ஏதும் வாங்கவில்லை. இனி வரும் நாள்களில், துணை ராணுவப்படையின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் இந்தப் பாடல் திரையிடப்படும். இந்தப் பாடல், இந்தோ-திபெத்தியன் எல்லைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது' என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.