வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (29/06/2017)

கடைசி தொடர்பு:08:45 (29/06/2017)

ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க முடிவு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கு ஏற்கெனவே காங்கிரஸ் கூட்டணி அரசு முயன்றது.  ஏர்இந்தியா விவகாரம்குறித்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து முடிவெடுப்பதற்கு என் தலைமையில் குழு அமைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமாக 140 விமானங்கள் உள்ளன. இருப்பினும் ஆண்டுக்கு 52,000 கோடி ரூபாய் கடனில் இயங்குகிறது. இதைச் சமாளிக்கும்பொருட்டு தனியாருக்கு விற்பனைசெய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 50 சதவிகித பங்குகள் வரை தனியாருக்கு விற்பனைசெய்யப்படும் என்று கூறினார்.