Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜி.எஸ்.டி அறிமுக விழா- காங்கிரஸ், தி.மு.க முக்கிய முடிவு

ஜி.எஸ்.டி வரி முறையாக அறிமுகம் செய்யப்படும் விழாவைப் புறக்கணிப்பது எனக் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.


ஜி.எஸ்.டி வரி வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான  விழா நாளை நள்ளிரவு நாடாளுமன்ற வளாக அரங்கில் வைத்து நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மன்மோகன் சிங் உள்பட் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாளை நடக்கும் இந்த விழாவை காங்கிரஸ் புறக்கணிக்கும் என்ற முடிவை எடுத்துள்ளது. ஏற்கெனவே மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், "அவசரகதியில் ஜி.எஸ்.டி வரி நிறைவேற்றப்படுகிறது'' என்று கூறி இந்த விழாவை புறக்கணித்திருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

இதனிடையே திமுகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் திமுக பங்கேற்காது என்றும், ஜிஎஸ்டி அறிமுக விழா வெற்று விளம்பரம் என்றும் திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement