'மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது'- கர்நாடக முதல்வர்

`ரயில் நிலையங்களில் இந்தித் திணிப்பை ஏற்கமுடியாது. பெங்களூரு மெட்ரோ, மாநில அரசின் திட்டம்’ என்று  கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

Karnataka Chief minister


காங்கிரஸ் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமாரின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் மத்திய அரசு இந்தித் திணிப்பதைக் கடுமையாகச் சாடினார். 

'பெங்களூரு மெட்ரோ, பெரும்பாலும் மாநில அரசின் நிதியிலேயே உருவானது, இது, மாநில அரசின் திட்டம். இங்கு இந்தியைத் திணிப்பது ஏற்றுகொள்ள இயலாது. இந்தி என்பது வடஇந்தியாவில் சில மாநிலங்களில் பேசும் மொழியே தவிர, நாடு முழுவதும் பேசும் மொழி கிடையாது. இந்தி பேசாத மாநிலங்களில் தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகா போராடும்', என்றார்.

மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவின் இந்தி குறித்த கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தார் சித்தராமையா. சமீபத்தில், 'தேசிய மொழியான இந்தியை நாட்டு மக்கள் அனைவரும் கற்க வேண்டும்' என்று வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்திருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!