Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காக்னிசென்ட் நிறுவனத்தின் புதிய அதிரடி: பணியாளர்களுக்கு விழுந்த அடுத்த அடி!

சிடிஎஸ் நிறுவனத்தில் இன்னும் மூன்று மாத காலங்களுக்குப் பணி உயர்வோ சம்பள உயர்வோ இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காக்னிசென்ட்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசென்ட், தன் பணியாளர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் பணி உயர்வையு சம்பள உயர்வையும் அறிவிக்கும். ஆனால், இந்தாண்டு நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரியிடமிருந்து வந்த புதிய தகவலால் ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை காக்னிசென்ட் நிறுவனத்தில் ஜூன் மாதம் பணி உயர்வும் சம்பள உயர்வும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு ஜூன் மாதம் முடியும் தருவாயிலும் மகிழ்ச்சி தரும் அறிவிப்புகள் ஏதும் வெளியாகாததால் ஊழியர்கள் கவலைக்குள்ளாயினர்.

இந்நிலையில் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், நிறுவனத்தில் மனித வளப்பிரிவு அதிகாரி ஜிம் லென்னாக்ஸ், ‘அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகள், பதவி உயர்வுகள் அறிவிக்கப்படும். இதில் மேலாளர் மற்றும் அதற்கு நிகரான பணியில் இருப்பவர்களுக்குச் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் உயர்த்தித் தரப்படும். இதற்கும் கூடுதல் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு மாத சம்பளத்தை உயர்த்தாமல் ஒரு குறிப்பிட்ட தொகை மொத்தமாக வழங்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஐடி நிறுவனங்களிலேயே அதிகளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்து தன் பணீயாளர்களுக்கான முதல் அதிர்ச்சியை சில நாள்கள் முன்னர் காக்னிசென்ட் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close