Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குஜராத்தில் புத்தருக்கு மிகப்பெரிய நினைவுச்சின்னம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தில் புத்தருக்கு மிகப்பெரிய நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

புத்தர் நினைவுச்சின்னம்

ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இரண்டு நாள்களுக்கு முன்னர் இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி. அதைத்தொடர்ந்து 2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத்துக்குச் சென்றுள்ளார் பிரதமர். குஜராத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு நீர்த் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மேலும், புதிய தபால்தலை வெளியீடு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். 

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆண்டில் மட்டும் 4-வது முறையாக குஜராத் சென்றுள்ள பிரதமர் கூறுகையில், ‘ஆரவல்லியில் உள்ள தேவ் நி மோரி பகுதியில் புத்தருக்கு மிகப்பெரிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். வடகிழக்கு இந்தியாவில் புத்தர் குறித்து மக்கள் வெகு அதிகமாகவே அறிந்து வைத்துள்ளனர். இந்த மிகப்பெரிய புத்தர் நினைவுச் சின்னத்தை அமைப்பதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் இப்பகுதிக்கு அதிகமாக வருகை தருவர். எனது விருப்பமான இப்பணியை விரைந்து முடிக்க மக்களாகிய உங்கள் ஆதரவு தேவை’ என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement