வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (01/07/2017)

கடைசி தொடர்பு:13:15 (01/07/2017)

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம். ஏப்ரல் மாதம் 29, 30-ம் தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் தாள் தேர்வை 2,41,555 பேரும், இரண்டாவது தாளை 5,12,260 பேரும் எழுதினார்கள். தற்போது முடிவை வெளியிட்டு இருக்கிறார்கள். தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் தகுதிபெற்றவர்களாக இருப்பார்கள்.  

ஆசிரியர் தகுதித்தேர்வு

தேர்வின் முடிவுகளை trb.tn.nic.in பார்த்து தெரிந்துகொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம் 4000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருப்பதும், இந்தத் தேர்வு மூன்று வருடங்களுக்குப் பின்பு இந்த ஆண்டுதான் நடைபெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.